/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிருட்டில் ரவுண்டானா அச்சத்தில் பேருந்து பயணியர்
/
கும்மிருட்டில் ரவுண்டானா அச்சத்தில் பேருந்து பயணியர்
கும்மிருட்டில் ரவுண்டானா அச்சத்தில் பேருந்து பயணியர்
கும்மிருட்டில் ரவுண்டானா அச்சத்தில் பேருந்து பயணியர்
ADDED : டிச 02, 2025 04:46 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் கும்மிருட்டாக உள்ளது. இதனால், பேருந்துக்காக இரவில் காத்திருக்கும் பயணியர் அச்சமடைந்து உள்ளனர்.
திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்டது, அரக்கோணம் ----- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை. இச்சாலை 24 கி.மீ., உடையது. திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து அரக்கோணம் வரையிலான 9 கி.மீ., சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பு கூட்டுச்சாலையாக இருந்தது. அங்கு, வாகன ஓட்டிகள் வசதிக்காக, தற்போது ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. ரவுண்டானா பகுதியில் இதுவரை உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால், இரவில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் அச்சமடைகின்றனர். மேலும், வெளியூர் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் குழப்பம் அடைகின்றனர்.
இச்சாலை வழியாக தினமும் திருவாலங்காடு ரயில் நிலையம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், வேலுார், திருத்தணி உள்ளிட்ட நகரங்களுக்கு, 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, திருவாலங்காடு ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

