/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
/
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 07, 2025 06:18 AM
திருவள்ளூர்: பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தோர், அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சர்வதேச மகளிர் தின விழா, அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது.
அன்றைய தினம், பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது, தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.
இவ்விருது குறித்த விவரம், விண்ணப்பம், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். சாதனை பெண்கள், விருது பெற வரும் 31ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தோர், தங்களை பற்றிய சுயவிபரங்களை, உரிய ஆவணங்களுடன் இணைத்து, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

