/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமூக நீதி விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
/
சமூக நீதி விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 09, 2025 04:45 AM
திருவள்ளூர்: சமூக நீதிக்கான பெரியார் விருது பெற விண்ணப்பம் செய்ய, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை கவுரவிக்க, சமூக நீதிக்கான பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு, 5 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் ஒரு சவரன் தங்க பதக்கம் வழங்கப்படும்.நடப்பு ஆண்டிற்கான சமூக நீதிக்கான விருது பெற, சமூகநீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியவர்கள், தங்களது விண்ணப்பத்தை கலெக்டருக்கு வரும் 18ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், தங்களது சுயவிவரம், முழு முகவரி, தொலை பேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விபரம் மற்றும் ஆவணங்களை, சமர்ப்பிக்க வேண்டும்.

