/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்ட அளவிலான ஹாக்கியில் சின்னசேக்காடு அரசு பள்ளி அசத்தல்
/
மாவட்ட அளவிலான ஹாக்கியில் சின்னசேக்காடு அரசு பள்ளி அசத்தல்
மாவட்ட அளவிலான ஹாக்கியில் சின்னசேக்காடு அரசு பள்ளி அசத்தல்
மாவட்ட அளவிலான ஹாக்கியில் சின்னசேக்காடு அரசு பள்ளி அசத்தல்
ADDED : மார் 17, 2024 11:15 PM
மணலி: ஆவடி, நசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில், 'டிரன்டி ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில், மாவட்டங்கள் இடையே பள்ளிகள் அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது.
இதில், கடலுார், ஒசூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதில், 14 வயதிற்கு உட்பட்டோர், ஆண்கள் பிரிவில், மணலி - சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அணி, அரையிறுதியில், ஆவடி, நசரேத் மெட்ரிக் பள்ளி அணியை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில், விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவர்கள் அணியுடன் விளையாடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
சாம்பியன் வென்ற மணலி - சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அணிக்கு, ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூர்யகுமார், பதக்கம், வெற்றிக்கோப்பையை வழங்கினார்.
ஹாக்கி போட்டியில் அடுத்தடுத்து வெற்றிகளை வாரி குவித்து வரும் மாணவர்கள் அணியை, பள்ளி தலைமை ஆசிரியை உஷா, பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் லுாயிஸ் உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர்.

