ADDED : நவ 12, 2025 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை: கட்டுமான பணி நடந்து வரும் பகுதியில், மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டவரை தாக்கிய போதை நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை அடுத்த கொத்தகுப்பத்தைச் சேர்ந்தவர் தர்மன், 38. இவர், அதே கிராமத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகள் நடந்து வரும் இடத்தில், நேற்று முன்தினம் மாலை இரண்டு நபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அதை, தர்மன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த போதை நபர்கள், தர்மனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணையில், அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்த நரேஷ், 19, என, தெரியவந்துள்ளது. மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

