/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க எதிர்பார்ப்பு
/
அரசு பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 12, 2025 10:20 PM

ஆர்.கே.பேட்டை: அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. 15 அடி நீளத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், இந்த வழியாக விஷப்பூச்சிகளும், கால்நடைகளும் பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்லும் நிலை உள்ளது.
தற்காலிகமாக முள்வேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், முள்வேலி நீண்ட காலத்திற்கு தாக்குபிடிப்பதில்லை. நிரந்த தீர்வாக கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

