/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாடுகளை சுற்றி திரியவிட்டால் அபராதம்: கமிஷனர் எச்சரிக்கை
/
மாடுகளை சுற்றி திரியவிட்டால் அபராதம்: கமிஷனர் எச்சரிக்கை
மாடுகளை சுற்றி திரியவிட்டால் அபராதம்: கமிஷனர் எச்சரிக்கை
மாடுகளை சுற்றி திரியவிட்டால் அபராதம்: கமிஷனர் எச்சரிக்கை
ADDED : ஜன 10, 2025 10:40 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், அரக்கோணம் சாலை, பேருந்து நிலையம், சன்னிதி தெரு, காந்தி ரோடு, சித்துார் சாலை, அக்கைய்யநாயடு சாலை, பைபாஸ் சாலை மற்றும் ம.பொ.சி.சாலை ஆகிய இடங்களில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், மேற்கண்ட இடங்களில், அதிகளவில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கால்நடைகள் மீது விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் திரியும் மாடுகள் மற்றும் படுத்து உறங்கும் மாடுகள் மீது மோதி, பலர் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கலெக்டர் பிரபுசங்கரும், கால்நடைகளை பிடிப்பதற்கு தனிக்குழு அமைத்தும் சாலையில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்யும் பணியும் நடந்து வருகிறது. இருப்பினும், திருத்தணி நகரத்தில் நாளுக்கு நாள் கால்நடைகள் பகல் நேரத்திலேயே அதிகளவில் சுற்றித் திரிகின்றன.
இது குறித்து, திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
நகராட்சியில், கால்நடை வளர்ப்பவர்களுக்கு, ஏற்கனவே சாலையில் மாடுகளை சுற்றிதிரிய விடக்கூடாது என, ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தி உள்ளோம். இருப்பினும் சிலர் மாடுகளை சாலையில் விடுகின்றனர். எனவே, சாலையில் திரியும் மாடுகள் பறிமுதல் செய்வதோடு, அபராதம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

