/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் மீனவர் படகு கவிழ்ந்து விபத்து நீரில் மூழ்கி ஒருவர் பலி: மற்றொருவர் மாயம்
/
பழவேற்காடில் மீனவர் படகு கவிழ்ந்து விபத்து நீரில் மூழ்கி ஒருவர் பலி: மற்றொருவர் மாயம்
பழவேற்காடில் மீனவர் படகு கவிழ்ந்து விபத்து நீரில் மூழ்கி ஒருவர் பலி: மற்றொருவர் மாயம்
பழவேற்காடில் மீனவர் படகு கவிழ்ந்து விபத்து நீரில் மூழ்கி ஒருவர் பலி: மற்றொருவர் மாயம்
ADDED : ஜன 11, 2025 02:18 AM

பழவேற்காடு:பழவேற்காடு கூனங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 45. இவரது பைபர் படகில், அதே கிராமத்தைச் சேர்ந்த மாணிபாலன், 35, செல்வம், 35, மோகன், 55, மற்றும் அரங்கம்குப்பத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், 25 ஆகியார், கடந்த 7ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
இரண்டு நாட்கள் மீன்பிடித்தபின், நேற்று மதியம் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். பழவேற்காடு முகத்துவாரம் அருகே வரும்போது, ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
பிடித்து வரப்பட்ட மீன்கள், வலைகள் ஆகியவை கடலில் அடித்து செல்லப்பட்டன. படகில் இருந்து ஐந்து மீனவர்களும் கடலில் விழுந்தனர். இதில், தட்சணாமூர்த்தி, மணிபாலன், சதிஷ்குமார் ஆகியோர் நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர்.
செல்வம், மோகன் ஆகியோர் கடலில் மூழ்கி மாயமாயினர். தகவல் அறிந்த மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்தனர்.
கடலில் மாயமானவர்களை தேடி வந்த நிலையில், நேற்று மாலை, மோகனின் உடல் கரை ஒதுங்கியது. செல்வத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
கடந்த மாதம், 23ம் தேதி, கோரைகுப்பம் மீனவர்கள் கடலுக்கு சென்றுவிட்டு, கரை திரும்பும்போது, அலையில் சிக்கி அடுத்தடுத்து ஐந்து படகுகள் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. அச்சம்பவத்தில் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பினர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் மற்றொரு படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கி, மீனவர் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் மாயமாகி இருக்கும் சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்பட்டு உள்ளது.

