/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு: இருளில் பூண்டி கூட்டு சாலை
/
ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு: இருளில் பூண்டி கூட்டு சாலை
ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு: இருளில் பூண்டி கூட்டு சாலை
ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு: இருளில் பூண்டி கூட்டு சாலை
ADDED : டிச 02, 2025 04:24 AM

திருவள்ளூர்: பூண்டி கூட்டு சாலையில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்கு, எரியாமல் காட்சிப்பொருளாக இருப்பதால், இரவு நேரத்தில் இருளில் மூழ்கி விடுகிறது.
திருவள்ளூரில் இருந்து 10 கி.மீ.,யில் அமைந்துள்ளது பூண்டி. ஊத்துக்கோட்டை சாலையில், நெய்வேலி கூட்டுச்சாலையில் இருந்து, இடதுபுறம் பூண்டி ஊராட்சிக்கு சாலை செல்கிறது.
இந்த கூட்டுச்சாலையில் இருந்து, பூண்டி ஊராட்சி, சதுரங்கப்பேட்டை, நெய்வேலி கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டைக்கு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
இதற்காக, கூட்டுச்சாலையில் பயணியர் நிழற்குடையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இரவு நேரத்தில், பயணியர் மற்றும் கிராம மக்களின் வசதிக்காக, பூண்டிக்கு பிரியும் சாலை சந்திப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.
இந்த விளக்கு, சில மாதங்களாக இரவில் ஒளிர்வதில்லை.
இதனால், இரவு நேரத்தில் சாலை முழுதும் இருளில் மூழ்கிவிடுவதால், பயணியர் மற்றும் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஊராட்சி நிர்வாகம் பூண்டி கூட்டுச்சாலையில் ஒளிராமல் உள்ள மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

