/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவிலில் துாய்மை பணி செய்த கல்லுாரி மாணவர்கள்
/
கோவிலில் துாய்மை பணி செய்த கல்லுாரி மாணவர்கள்
ADDED : பிப் 11, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி முருகன் உபகோவிலான மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் வளாகத்திற்கு, நேற்று, ஜி.ஆர்.டி., கல்வியியல் கல்லுாரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள், 20க்கும் மேற்பட்டோர், கல்லுாரி முதல்வர் ராதிகா வித்யாசாகர் தலைமையில் வந்தனர்.
பின், மாணவர்கள் கோவில் வளாகம் மற்றும் அம்மன் கோவில் உட்புறம் முழுதும் துாய்மை பணிகள் மேற்கொண்டனர். மேலும், கோவில் வளாகத்தில் இருந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றியும் வளாகத்தை சுத்தப்படுத்தினர்.
தொடர்ந்து கல்வியியல் கல்லுாரி மாணவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனை வளாகம் முழுதும், குப்பை, செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

