/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோரமங்கலம் நந்தியாறு மேம்பால சாலை சேதம்
/
கோரமங்கலம் நந்தியாறு மேம்பால சாலை சேதம்
ADDED : டிச 09, 2025 06:43 AM

திருத்தணி: கோரமங்கலம் நந்தியாறு மேம்பாலம் சேதமடைவது, தற்காலிகமாக சீரமைப்பது, மீண்டும் சேதமடைவது என, தொடர் கதையாக உள்ளது. நிரந்தர தீர்வு காணவேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை கோரமங்கலம் அருகே செல்லும் நந்தியாற்றின் குறுக்கே 15 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறையினர், 9 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைத்து, தார்சாலை அமைத்தனர்.
இச்சாலை முறையாக பராமரிக்காததால் மேம்பாலத்தில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் தார்ச்சாலை பெயர்ந்தும், பாலம் நுழைவு பகுதியில் கான்கிரீட் தளமும் சேதம் அடைந்தும் உள்ளது. இதனால் மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
மேம்பாலத்தின் தார்ச்சாலை சேதம் அடைவதும், தற்காலிகமாக சீரமைப்பதும், ஒரே மாதத்தில் மீண்டும் மேம்பாலம் சேதமடைவதும் தொடர்கிறது. மூன்று அல்லது நான்கு முறை நெடுஞ்சாலையினர் கடமைக்காக சீரமைத்து வருகின்றனர்.
நிரந்தரமான தீர்வு காணாமல் துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக தீர்வு காணவேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

