/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளை கண்டித்த எம்.எல்.ஏ.,
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளை கண்டித்த எம்.எல்.ஏ.,
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளை கண்டித்த எம்.எல்.ஏ.,
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அதிகாரிகளை கண்டித்த எம்.எல்.ஏ.,
ADDED : நவ 12, 2025 10:25 PM

திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், செயல்படாத ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலரை, தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் கடிந்து கொண்டார்.
திருத்தணி ஒன்றியத்தில், மூன்று மாதங்களாக, 15க்கும் மேற்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்து வருகிறது. நிறைவு நாளான நேற்று, கோரமங்கலம் ஊராட்சியில், திருத்தணி தாசில்தார் குமார் தலைமையில் முகாம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்தானம் ஆகியோர் முன்னிலையில் நடந்த முகாமில், வருவாய் துறை, மின்சாரம், சுகாதாரம், ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட 20க்கும் மேற்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
முகாமை, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் துவக்கி வைத்தார். பின், கோரமங்கலம் காலனி மக்கள், 'எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பல மாதங்களாக சுத்தம் செய்யாமல் உள்ளதால், பூச்சிகள் மற்றும் பாம்புகள் உள்ளன.
'சுகாதாரம் இல்லாத குடிநீர் வினியோகம் செய்கின்றனர்' என, புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த, எம்.எல்.ஏ., ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலரை கண்டித்தார்.
பின், 'உடனே தொட்டியை சுத்தம் செய்து, என்னிடம் போட்டோ ஆதராத்துடன் காண்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், உங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, கலெக்டரிடம் பரிந்துரை செய்வேன்' என, எச்சரித்தார்.
தொடர்ந்து, புதிய ரேஷன் கார்டு, மின் இணைப்பு, பட்டா, நுாறு நாள் வேலை அட்டை என, 20க்கும் மேற்பட்டோருக்கு, எம்.எல்.ஏ., சந்திரன் ஆணை மற்றும் நகல்கள் வழங்கினார்.
திருமழிசை திருமழிசை பேரூராட்சி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று, பகுதிமக்களிடம் மனுக்களை பெற்றார்.
நேற்று நடந்த முகாமில், மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் குவிந்தனர். இதில், 578 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் உட்பட, மொத்தம் 719 மனுக்கள் பெறப்பட்டன.

