/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கள்ளக்காதலனுடன் தங்கிய இளம்பெண் படுகொலை
/
கள்ளக்காதலனுடன் தங்கிய இளம்பெண் படுகொலை
ADDED : மார் 17, 2024 11:17 PM
குன்றத்துார்: குன்றத்துார், வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 37; ஹோட்டல் ஊழியர். இவருக்கு, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த, வேறொருவருடன் திருமணமான லோகநாயகி, 35, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கணவர் மற்றும் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு, குன்றத்துாரில் கிருஷ்ணகுமாருடன் லோகநாயகி வசித்து வந்தார்.
இந்நிலையில், மூன்று நாட்களாக வீடு பூட்டியே இருந்துள்ளது. நேற்று, வீட்டில் இருந்து கடும் துார்நாற்றம் வீசியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த குன்றத்துார் போலீசார், கதவை உடைத்து சென்று பார்த்த போது லோகநாயகி இறந்த நிலையில், அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் இருந்தது. லோகநாயகியை கொலை செய்து தலைமறைவான கிருஷ்ணகுமாரை தேடுவதாக, போலீசார் கூறினர்.

