/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் மக்கள் குறைகள் தீர்க்கப்படும்: நயினார்
/
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் மக்கள் குறைகள் தீர்க்கப்படும்: நயினார்
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் மக்கள் குறைகள் தீர்க்கப்படும்: நயினார்
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் மக்கள் குறைகள் தீர்க்கப்படும்: நயினார்
ADDED : டிச 09, 2025 06:47 AM

ஆர்.கே.பேட்டை: ''வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் நிகழும், அப்போது உங்களின் குறைகள் முழுமையாக தீர்க்கப்படும் என,'' அம்மையார்குப்பத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில், பா.ஜ., சார்பில் கிராம சபை கூட்டம் மாவட்ட தலைவர் அஸ்வின் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
'தமிழகம் தலை நிமிர', தமிழக பயணம் என்ற யாத்திரை துவங்கி நடந்து வருகிறது. 32 வது மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பல தரப்பு மக்கள், தி.மு.க., அரசின் மீது பல்வேறு குறைகள் மற்றும் புகார் தெரிவித்துள்ளனர். ஆவடி நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளன. ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பு செய்து, தி.மு.க.வினர் பட்டா போட்டு கொடுத்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெறும். ஆட்சி மாற்றம் வந்தவுடன் உங்கள் குறைகள் கட்டாயமாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயலர் மீனாட்சி, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி, மாநில அயலக தமிழர் நலப்பிரிவு இணை அமைப்பாளர் டாக்டர் ஸ்ரீகிரண், திருத்தணி சட்டசபை தொகுதி அமைப்பாளர் சுரேஷ் உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக நயினார் நாகேந்திரன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கு ஆபத் சகாய விநாயகர், சண்முகர், மூலவர், உற்சவர், வள்ளி, தெய்வானை ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை நடத்தி வழிப்பட்டார். நயினார் நாகேந்திரனுக்கு வெள்ளிவேல் பரிசாக வழங்கப்பட்டது.

