/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை
/
மழைநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 12, 2025 10:19 PM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் கிருஷ்ணமராஜகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது கன்னிகாம்பாபுரம் காலனி. இங்குள்ள மழைநீர் கால்வாய் நீண்டகாலமாக பராமரிக்கப்படாமல் சீரழிந்துள்ளது. இதில் குப்பையும், கழிவுநீரும் கலந்துள்ளது.
இதனால், கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மழைநீர் கால்வாயில் குடிநீர் குழாயும் புதைக்கப்பட்டுள்ளது. கால்வாய் சீரழிந்து கிடப்பதால், குடிநீர் குழாயின் நிலையும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால், கிராமத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.
காப்புக்காட்டில் இருந்து தெருவின் வழியாக செல்லும் மழைநீர் கால்வாய், தெருவின் குறுக்கே உயரம் குறைவாக இருப்பதால், குடியிருப்புகளை வெள்ளநீர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மழைநீர் கால்வாயை சீரமைக்கவும், கழிவுநீர் மற்றும் குப்பையை முறையாக அகற்றவும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

