/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் அம்மையார்குப்பத்தில் பரபரப்பு
/
சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் அம்மையார்குப்பத்தில் பரபரப்பு
சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் அம்மையார்குப்பத்தில் பரபரப்பு
சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் அம்மையார்குப்பத்தில் பரபரப்பு
ADDED : நவ 12, 2025 10:25 PM

ஆர்.கே.பேட்டை: சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, அம்மையார்குப்பத்தில் நேற்று மீண்டும் துவங்கியது. இதில், நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் கிராமத்தில் பஜார் சாலை குறுக்கலாக உள்ளது. இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, ஓராண்டுக்கும் மேல் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. நேற்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் மேற்கொள்ளப்பட்டது.
இதில், நெடுஞ்சாலை, வருவாய் மற்றும் காவல் துறையினர் இணைந்து செயல்பட்டனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பஜார் சாலை மேற்கில் ஆந்திரா பேருந்து நிலையத்தில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.
இதில், ஐந்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபட்டிருந்தன. பொக்லைன் இயந்திரங்கள் இடிக்க வரும் முன்பே, பகுதி மக்கள் கட்டடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றம் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

