/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எச்.ஐ.வி., தொற்றால் பாதித்த 18 பேருக்கு ரூ.2 லட்சம் உதவி
/
எச்.ஐ.வி., தொற்றால் பாதித்த 18 பேருக்கு ரூ.2 லட்சம் உதவி
எச்.ஐ.வி., தொற்றால் பாதித்த 18 பேருக்கு ரூ.2 லட்சம் உதவி
எச்.ஐ.வி., தொற்றால் பாதித்த 18 பேருக்கு ரூ.2 லட்சம் உதவி
ADDED : டிச 02, 2025 04:44 AM

திருவள்ளூர்: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, எச்.ஐ.வி., தொற்றால் பாதித்த 18 பேருக்கு, 2.24 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தையல் இயந்திரம், சுயதொழில் செய்ய தள்ளுவண்டி என, 2.24 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவியை கலெக்டர் வழங்கினார்.
பின், எச்.ஐ.வி., தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய தொண்டு நிறுவனங்களை பாராட்டி கேடயம் வழங்கினார்.