/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பரவி கிடக்கும் ஜல்லி கற்கள் வாகன ஓட்டிகள் அவதி
/
பரவி கிடக்கும் ஜல்லி கற்கள் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 09, 2025 06:49 AM

கும்மிடிப்பூண்டி: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் சாலையில் பரவி கிடக்கும் ஜல்லி கற்களால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியில் கடந்த வாரம் பெய்தகனமழையால் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகள் சேதமடைந்தது. குறிப்பாக மேம்பாலங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து, சிறிய ஜல்லி கற்கள் பெயர்ந்து மேம்பால இறக்கத்தில், மழைநீர் வழிந்தோடியது.
தற்போது வழிந்தோடிய தடத்தில், ஜல்லி கற்கள் பரவி கிடக்கின்றன. ஓபுளாபுரம், பெத்திக்குப்பம், சிப்காட், பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பு, கவரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் இறக்கத்தில் ஜல்லி கற்கள் பரவி கிடக்கின்றன. இதனால், அப்பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக, உடனடியாக மேற்கண்ட பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

