/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரும்பு அரவை துகள்கள்: கண்களில் விழுவதால் மக்கள் அவதி
/
கரும்பு அரவை துகள்கள்: கண்களில் விழுவதால் மக்கள் அவதி
கரும்பு அரவை துகள்கள்: கண்களில் விழுவதால் மக்கள் அவதி
கரும்பு அரவை துகள்கள்: கண்களில் விழுவதால் மக்கள் அவதி
ADDED : நவ 14, 2025 01:42 AM

திருவாலங்காடு: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையின் போது வெளியேறும் கருந்துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவாலங்காடில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு, அரக்கோணம், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து டிராக்டர், லாரி வாயிலாக கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப் படுகிறது.
நடப்பாண்டிற்கான கரும்பு அரவை இலக்கு, 2 லட்சம் டன்னாக நிர்ணயித்து, கடந்த மாதம் முதல் அரவை நடந்து வருகிறது. அரவையின் போது ஆலையில் இருந்து வெளியேறும் புகையுடன், கருந்துகள்கள் செல்வதை கட்டுப்படுத்த இரண்டு அடுக்கு பில்டர் அமைக்க வேண்டும்.
தற்போது, துகளை கட்டுப்படுத்த பில்டர் அமைக்காமல் உள்ளதால், புகையுடன் துகள்கள் வெளியேறுவதாக, அருகே உள்ள சக்கரமநல்லூர் மற்றும் பகவதிபட்டாபிராம புரம் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த கருந்துகள்கள் கண்களில் விழுவதால் கண் எரிச்சல், தொடர் தும்மல் உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, சர்க்கரை ஆலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் கருந்துகள்கள் விழுவதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சர்க்கரை ஆலை செயலாட்சியர் மீனா, இதற்கு தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

