/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழியும் குளக்கரை
/
பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழியும் குளக்கரை
ADDED : டிச 07, 2025 06:31 AM

ஆர்.கே.பேட்டை: சிவன் கோவில் எதிரே உள்ள குளக்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தின் காரியசித்தீஸ்வரர் கோவில் மற்றும் திரவுபதியம்மன் கோவில் எதிரே குளம் உள்ளது.
இந்த குளம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் துார்வாரி சீரமைக்கப்பட்டது. சுற்றுப்பகுதியில் இரும்பு கிரில் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குளக்கரையில் தற்போது ஏராளமான பிளாஸ்டிக் கழிவு குவிந்து கிடக்கிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து வருகிறது. கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குளக்கரைக்கு எதிரே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. குளக்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்களை, ஊராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

