/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
புதுப்பட்டு பொன்னியம்மன் கோவிலில் திருட்டு
/
புதுப்பட்டு பொன்னியம்மன் கோவிலில் திருட்டு
PUBLISHED ON : டிச 09, 2025 06:43 AM

புதுப்பட்டு: புதுப்பட்டு பொன்னியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் மற்றும் நகைகள் திருட்டு போனது.
கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்துள்ளது புதுப்பட்டு ஊராட்சி. இங்குள்ள பொன்னியம்மன் கோவிலில் செல்வம், 50 என்பவர் பூசாரியாக பணி புரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி விட்டு நேற்று காலை கோவிலுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த, 31 கிலோ எடை வெண்கல மணி, சூலாயுதம் மாயமானது தெரிய வந்தது.
அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது. உண்டியலை உடைத்து அதிலிருந்த பணமும் திருட்டு போனது. மேலும் கோவிலில் மூலஸ்தானத்தில் இருந்த வெண்கல அம்மன் சிலையை திருட முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

