/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறுக்கே வந்த எருமை மாடு பஸ் விபத்தில் இருவர் காயம்
/
குறுக்கே வந்த எருமை மாடு பஸ் விபத்தில் இருவர் காயம்
குறுக்கே வந்த எருமை மாடு பஸ் விபத்தில் இருவர் காயம்
குறுக்கே வந்த எருமை மாடு பஸ் விபத்தில் இருவர் காயம்
ADDED : பிப் 04, 2025 01:10 AM

மறைமலை நகர்,
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் இருந்து தனியார் தொழிற்சாலை பேருந்து, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், நேற்று மாலை வந்தது. சேந்தமங்கலம் அருகில் வந்த போது,சாலையின் குறுக்கே எருமை மாடு ஒன்று ஓடியுள்ளது.இதைப் பார்த்த ஓட்டுனர், திடீர் 'பிரேக்' அடித்து பேருந்தை நிறுத்தினார். அப்போது, பின்னால் திருவள்ளூரில் இருந்துசெங்கல்பட்டு நோக்கி வந்த, தடம் எண் '82சி' அரசு பேருந்து, தனியார் தொழிற்சாலை பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இதில், அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
அரசு பேருந்தில் பயணம் செய்த செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்,54, என்பவருக்கு, இடது கண் புருவத்தில் காயம் ஏற்பட்டது.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்,26, என்பவருக்கு, இரண்டு பற்கள் உடைந்தன. இச்சம்பவம் குறித்து, பாலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

