/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்களுக்கான பளுதுாக்கும் போட்டி; ஊத்துக்கோட்டை முதலிடம்
/
பெண்களுக்கான பளுதுாக்கும் போட்டி; ஊத்துக்கோட்டை முதலிடம்
பெண்களுக்கான பளுதுாக்கும் போட்டி; ஊத்துக்கோட்டை முதலிடம்
பெண்களுக்கான பளுதுாக்கும் போட்டி; ஊத்துக்கோட்டை முதலிடம்
ADDED : டிச 09, 2025 06:47 AM

ஊத்துக்கோட்டை: மாநில அளவிலான பெண்கள் பளுதுாக்கும் போட்டியில், ஊத்துக்கோட்டையை சேர்ந்த பெண் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
தமிழ்நாடு பளுதுாக்கும் விளையாட்டு அமைப்பின் சார்பில், பெண்களுக்கான மாநில அளவிலான பளுதுாக்கும் போட்டி சென்னை மாதவரத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் சென்னை, திருச்சி, கரூர், விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
இதில், 84 கிலோ எடை பிரிவில் ஊத்துக்கோட்டையை சேர்ந்த யாழினி முதல் இடத்தை பிடித்து, தங்கப்பதக்கம், சான்றிதழ் பெற்றார்.
தொடர்ந்து ஊத்துக்கோட்டை மசூல்மேக்கர் உடற்பயிற்சி கூடத்தில் பாராட்டு விழா நடந்தது. பயிற்சியாளர் ரேவந்த்குமார் யாழினியை பாராட்டினார்.