/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் நிறுத்தம் கும்மிடி சிப்காட் நுழைவாயிலில் நெரிசல்

ADDED : டிச 07, 2025 06:20 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் முகப்பில், மேம்பாலத்தின் கீழ் உள்ள உணவகங்கள் முன் நிறுத்தப்படும் வாகனங்களால், சிப்காட் நுழைவாயிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு தினசரி, ஆயிரக்கணக்கான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகன ங்கள் வந்து செல்கின்றன.
சிப்காட் முகப்பில் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் ஒன்று உள்ளது. அதன் கீழ், வாகனங்கள் கடந்து செல்லும் பகுதியில், ஏராளமான உணவகங்கள் இயங்கி வருகின்றன.
உணவகங்களுக்கு வரும் வாகனங்கள், அப்படியே மேம்பாலத்தின் கீழ், போக்குவரத்துக்கு இடையூறாக, கிடைக்கும் இடத்தில், நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரத்தில் இதுபோன்று ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால், தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். விதிகள் மீறி நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.