/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை
/
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை
ADDED : மார் 19, 2024 08:32 PM
ஊத்துக்கோட்டை:தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக, ஏப்., 19ம் தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து முக்கிய கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்யும் இறுதி கட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால், ஒவ்வொரு பகுதியிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவை நியமிக்கப்பட்டு, வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் - தனி லோக்சபா தொகுதியில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி, மாதவரம், பொன்னேரி - தனி, பூந்தமல்லி - தனி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
நேற்று, திருவள்ளூர் -- ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில், புல்லரம்பாக்கம் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.