/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அக்கரம்பேடில் தரைப்பாலம் சேதம் அச்சத்தில் பயணிக்கும் கிராம மக்கள்
/
அக்கரம்பேடில் தரைப்பாலம் சேதம் அச்சத்தில் பயணிக்கும் கிராம மக்கள்
அக்கரம்பேடில் தரைப்பாலம் சேதம் அச்சத்தில் பயணிக்கும் கிராம மக்கள்
அக்கரம்பேடில் தரைப்பாலம் சேதம் அச்சத்தில் பயணிக்கும் கிராம மக்கள்
ADDED : டிச 02, 2025 04:23 AM

பொன்னேரி: அனுப்பம்பட்டு - அக்கரம்பேடு இடையே உள்ள கால்வாய் தரைப்பாலம் சேதமடைந்து, மழைநீர் தேங்கி இருப்பதால், கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு - அக்கரம்பேடு சாலையில், மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதமடைந்து உள்ளது.
பாலம் உள்வாங்கியும், ஆங்காங்கே விரிசல்களுடனும் உள்ளதால், பலவீனம் அடைந்து வருகிறது.
தற்போது, பாலத்தின் மேல்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் , வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர். அக்கரம்பேடு, வெள்ளம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து, அனுப்பம்பட்டு வருவோர், இப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். பாலம் பலவீனமடைந்து, உடைந்து விழும் நிலையில் இருப்பதால், கிராம மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
எனவே, தரைப்பாலத்தை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.