தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கதவை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய வாலிபர் கைது

 கதவை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய வாலிபர் கைது

 கதவை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய வாலிபர் கைது


ADDED : ஜூலை 02, 2026 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 02:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: வீட்டின் கதவை உடைத்து, வெள்ளி பொருட்களை திருடி சென்றவரை, போலீசார் கைது செய்தனர்.

திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை கிராமம், அரிச்சந்திராபுரம் சாலையில் வசிப்பவர் வனஜா, 48. இவர், சின்னம்மாபேட்டை பஜாரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இவரது வீட்டில், கடந்த மாதம் 22ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள், பின்பக்க கதவை உடைத்து, பூஜை அறையில் இருந்த, 30,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

இதுகுறித்து, வனஜா திருவாலங்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிந்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று இந்த திருட்டு வழக்கில் தொடர்புடையதாக, சென்னை பெரம்பூரை சேர்ந்த விக்னேஷ்குமார், 31, என்பவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us