/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
பொதுச்சொத்து சேத வழக்கு; விவசாய சங்க நிர்வாகிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை
/
பொதுச்சொத்து சேத வழக்கு; விவசாய சங்க நிர்வாகிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை
பொதுச்சொத்து சேத வழக்கு; விவசாய சங்க நிர்வாகிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை
பொதுச்சொத்து சேத வழக்கு; விவசாய சங்க நிர்வாகிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை
ADDED : டிச 07, 2025 07:09 AM
திருவாரூர்: பொது சொத்தை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு, நான்கு பிரிவுகளின் கீழ், 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியம் அருகேயுள்ள காரியமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி, நிறுவனம் உள்ளது. இதற்கு எதிராக, 2015 ஜூலை, 16ல் நடந்த போராட்டத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவன பொருட்கள் சேதப்படுத்தபட்டன.
இது தொடர்பாக, ஒப்பந்ததாரர் வாஞ்சிநாதன் புகாரில், விக்கிரபாண்டியம் போலீசார், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், அப்போதைய பஞ்., தலைவர் செல்வராஜ் உட்பட, 22 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
மன்னார்குடி ஜே.எம்., 2 கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு, விரைவாக விசாரிப்பதற்காக திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நேற்று, இறுதி விசாரணை தீர்ப்பில், பி.ஆர்.பாண்டியனுக்கு, பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக, 5 ஆண்டுகள், கொடிய ஆயுதங்களுடன் நுழைந்ததற்காக, 3 ஆண்டுகள், அத்துமீறலுக்காக, 2 ஆண்டுகள், மிரட்டலுக்காக, 3 ஆண்டுகள் என, நான்கு பிரிவுகளில், 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார்.
இதேபோல், செல்வராஜுக்கு, 13 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில், 18 பேர் விடுவிக்கப்பட்டனர். இருவர் இறந்துவிட்டனர்.

