/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
பெண்ணை கடத்தி பலாத்காரம் ஆட்டோ டிரைவருக்கு 'காப்பு'
/
பெண்ணை கடத்தி பலாத்காரம் ஆட்டோ டிரைவருக்கு 'காப்பு'
பெண்ணை கடத்தி பலாத்காரம் ஆட்டோ டிரைவருக்கு 'காப்பு'
பெண்ணை கடத்தி பலாத்காரம் ஆட்டோ டிரைவருக்கு 'காப்பு'
ADDED : செப் 14, 2024 10:35 PM
திருப்பத்துார்:திருப்பத்துாரை சேர்ந்த 35 வயது பெண் உடல்நலம் பாதித்து, கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் நடந்து சென்றார். திருப்பத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்றபோது, ஆட்டோவில் வந்த டிரைவர் கட்டாயப்படுத்தி அவரை ஏற்றி சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு செல்லாமல், இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரிடமிருந்த மொபைல்போனையும் பறித்துள்ளார். தப்பித்த பெண், திருப்பத்துார் டவுன் போலீசில் புகார் செய்தார்.
மொபைல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடியதில், ஆசிரியர் நகரில் ஆட்டோ டிரைவர் இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், திருப்பத்துார் பெரியார் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கர், 25, என்பவரை கைது செய்தனர்.