/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிமீறி புலிகள் காப்பகத்தில் தங்கிய 12 பேருக்கு அபராதம்
/
விதிமீறி புலிகள் காப்பகத்தில் தங்கிய 12 பேருக்கு அபராதம்
விதிமீறி புலிகள் காப்பகத்தில் தங்கிய 12 பேருக்கு அபராதம்
விதிமீறி புலிகள் காப்பகத்தில் தங்கிய 12 பேருக்கு அபராதம்
ADDED : ஆக 26, 2024 04:39 AM

உடுமலை: @Image@திருப்பூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உடுமலை வனச்சரகத்தில், காட்டுப்பட்டி, மாவடப்பு உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உடுமலை வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, மாவட்ட மலைவாழ் கிராமத்தை சேர்ந்த, குமார் என்பவர் வீட்டில் அனுமதியின்றி தங்கியிருந்த நபர்களிடம் விசாரணை செய்தனர்.
இதில், அவர்களில் நால்வர், சென்னையைச் சேர்ந்த 35 - 37 வயதினர்; அகதிகள் முகாமை சேர்ந்த, 28 - 43 வயதுடைய மூவர் என்பது தெரிந்தது. இவர்கள் ஏழு பேரும், முன் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் சுற்றியதும், மலைவாழ் கிராமத்தில் தங்கியதும் தெரிந்தது.இதையடுத்து, பல இன வனக்குற்றங்கள் பிரிவின் கீழ், ஏழு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தலா, 20,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதுபோல, உடுமலை அருகே ராவணாபுரத்தை சேர்ந்த 27 - 52 வயதுடைய ஐவர், மாடுகள் வாங்குவதற்காக அனுமதி இல்லாமல், மாவடப்பு மலைவாழ் கிராமத்துக்கு சென்றிருந்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, தலா, 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

