/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூங்காக்கள் குட்டீஸூக்கு கொண்டாட்டம் தருமா? தென்றலாக சில... பாலையாக பல...!
/
பூங்காக்கள் குட்டீஸூக்கு கொண்டாட்டம் தருமா? தென்றலாக சில... பாலையாக பல...!
பூங்காக்கள் குட்டீஸூக்கு கொண்டாட்டம் தருமா? தென்றலாக சில... பாலையாக பல...!
பூங்காக்கள் குட்டீஸூக்கு கொண்டாட்டம் தருமா? தென்றலாக சில... பாலையாக பல...!
ADDED : ஏப் 28, 2024 02:30 AM

பள்ளிகளில் கோடை விடுமுறை துவங்கி விட்டது. திருப்பூரில் பூங்காக்கள், மாணவர்களை மகிழ்விக்கும் இடமாக உள்ளன.
வெள்ளி விழா பூங்கா வசீகரம்
இங்குள்ள மாநகராட்சி வெள்ளி விழாப் பூங்கா நொய்யல் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். நுழைவுக்கட்டணம் செலுத்தியே பூங்காவில் நுழைய வேண்டும்.
இதில் தற்போது செயற்கை நீரூற்று, மீன் கண்காட்சியகம், ராட்டினங்கள், புல் வெளி, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. விடுமுறை நாட்கள் துவங்கி, பார்வையாளர்கள் வருகை அதிகரிக்கும் என்ற நிலையில் தற்போது செயற்கை நீரூற்றுகள் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.
மூங்கில் பூங்காகவர்கிறது
மங்கலம் அருகே சின்னக்காளிபாளையத்தில் மாநகராட்சியின் கீழ் தனியார் பங்களிப்புடன் அமைந்துள்ள மூங்கில் பூங்கா நகரிலிருந்து சற்று தள்ளி இருந்தாலும், பார்வையாளர்களை கவரும் வகையில் உரிய பராமரிப்புடன் காணப்படுகிறது.
பிற பூங்காக்கள் நிலை என்ன?
l திருப்பூர், ராயபுரம் பகுதி பூங்கா உள்ளிட்ட சில பூங்காக்கள் உரிய வகையில் பராமரிக்கப்படும் நிலையில், பார்வையாளர்களைக் கவரும் வகையில் உள்ளன.
l பி.என்., ரோடு, குமரன் பூங்கா மாநகராட்சியால் அமைக்கப்பட்டது. நீண்ட காலமாக இந்த பூங்கா இருப்பதே தெரியாத நிலையில் இருந்தது. போதை ஆசாமிகள், விஷமிகள் நடமாட்டம் மட்டுமே காணப்பட்ட இந்த பூங்கா தற்போது, தன்னார்வலர்கள் முயற்சியால் புனரமைக்கப்பட்டுள்ளது.
காலை மற்றும் மாலை நேரம் மட்டும் திறக்கப்படுகிறது. விடுமுறை காலத்திலாவது இது பகல் நேரத்தில் திறக்கப்பட வேண்டும். சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்துவர்.
l கே.பி.என்., காலனி, அண்ணா நகர் விரிவு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா, நடை பாதை, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் உள்ளது. தனி நபர் ஆக்கிரமிப்பால் மாட்டு தொழுவமாக மாறியுள்ளது.
பொதுமக்கள் எட்டிக் கூடப் பார்க்க முடிவதில்லை. மாடுகள் கட்டிய நேரம் போக மீதி நேரம் முழுவதும் கேட் பூட்டிக் கிடக்கிறது. தண்ணீர் தொட்டி இரண்டாகப் பிளந்து காட்சியளிக்கிறது. உரிய பராமரிப்பின்றி, பூங்கா வனாந்திரப் பகுதி போல் காட்சியளிக்கிறது.
l வீரபாண்டி, கல்லாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பூங்காக்களும் உரிய பராமரிப்பின்றி அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. மனதுக்கு மகிழ்ச்சியை, ஆறுதலை ஒரு சிறு மாற்றத்தை தரும் வகையிலான பூங்காக்கள் அமைக்கப்படுவது மட்டுமில்லாமல் அதை முறையாக பராமரிப்பு செய்து, பார்வையாளர்கள் பயன் படுத்தும் விதமாக மாற்ற வேண்டியதும் மாநகராட்சியின் பொறுப்பு.

