/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லோக்சபா தேர்தலுக்கு இடையூறு வி.சி.க., வக்கீல் மீது வழக்கு
/
லோக்சபா தேர்தலுக்கு இடையூறு வி.சி.க., வக்கீல் மீது வழக்கு
லோக்சபா தேர்தலுக்கு இடையூறு வி.சி.க., வக்கீல் மீது வழக்கு
லோக்சபா தேர்தலுக்கு இடையூறு வி.சி.க., வக்கீல் மீது வழக்கு
ADDED : மார் 21, 2024 08:56 PM
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துார் ராயப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசராவ். இவர், வி.சி.க., வக்கீல் அணி மாநில துணை செயலராகவும் உள்ளார். இவர், இப்பகுதியில் கடந்த சில தினங்களாக, பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றபோது, குடிநீரில் கழிவுநீர் கலந்தே காரணம் என பொய்யான செய்தியை பரப்பி, பொதுமக்களை சாலை மறியல் செய்ய துாண்டிவிட்டு, அரசு அலுவலகங்களில் போராட்டம் நடத்தி, லோக்சபா தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தி, தன்னை முன்னிலைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டார் என தெரிகிறது.
இதுகுறித்து, வி.ஏ.ஓ., முத்துசாமி வி.களத்துார் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வி.களத்துார் போலீசார் பேச்சு, எழுத்து அல்லது சைகையால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்தல், பொது அமைதிக்கு எதிராக குற்றம் செய்ய துாண்டுதல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் சீனிவாசராவ் மீது வழக்கு பதிந்தனர்.
பார்கவுன்சிலில் பதிவு இல்லை: சீனிவாசராவ் பார்கவுன்சிலில் இதுவரை தனது பெயரை பதிவு செய்யவில்லை என, மங்கூன் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வேல்முருகன் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் பெற்றுள்ளதாக கூறுகிறார். சீனிவாசன் என்ற பெயரில் பார்கவுன்சிலில், தான் பதிவு செய்துள்ளதாகவும், தன்னை கட்சியினர் சீனிவாசராவ் என்று புனைப்பெயரில் அழைப்பதாகவும் இவர் தெரிவிக்கிறார்.

