/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானாவாரியில் விளைச்சல் சரிவு பருத்தி விவசாயிகள் கவலை
/
மானாவாரியில் விளைச்சல் சரிவு பருத்தி விவசாயிகள் கவலை
மானாவாரியில் விளைச்சல் சரிவு பருத்தி விவசாயிகள் கவலை
மானாவாரியில் விளைச்சல் சரிவு பருத்தி விவசாயிகள் கவலை
ADDED : பிப் 10, 2025 05:45 AM

உடுமலை : மானாவாரி பருத்தி சாகுபடியில், விளைச்சல் குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் முன்பு, பருத்தி பிரதான சாகுபடியாக இருந்தது. பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும், பருவமழையை ஆதாரமாக கொண்டு, மானாவாரியாகவும் தற்போது குறைந்த பரப்பில், பருத்தி சாகுபடி செய்கின்றனர்.
கடந்த சீசனில், வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து, மானாவாரியாக குறைந்த நுாலிழை நீளம் கொண்ட பருத்தி ரகத்தை நடவு செய்தனர்.
ஆனால், செடிகளின் வளர்ச்சி தருணத்தில், மழை கிடைக்கவில்லை; இதனால், வளர்ச்சி மற்றும் பூ பிடித்தல் பாதிக்கப்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், 'மானாவாரி சாகுபடியில், சீதோஷ்ண நிலை ஒத்து போனால், ஏக்கருக்கு, 130 கிலோ கொண்ட, 8 பொதி வரை விளைச்சல் கிடைக்கும். இந்தாண்டு மழை தாமதம், பூ உதிர்தல் காரணமாக, விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.
போதிய விலை கிடைக்கும் வரை பருத்தியை இருப்பு வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.

