/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கார் ஏற்றி மருமகனை கொல்ல முயன்ற மாமனார் கைது
/
கார் ஏற்றி மருமகனை கொல்ல முயன்ற மாமனார் கைது
ADDED : பிப் 28, 2025 12:23 AM
திருப்பூர்; குண்டடம், கருப்பட்டிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 33. இவரது மனைவி பிரியா, 27. தம்பதிக்கு, நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.
சமீபத்தில், தந்தை வீட்டுக்கு சென்ற பிரியாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மீண்டும் பிரச்னை ஏற்பட, அருகில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்றார். இதையறிந்த, பிரியாவின் தந்தை செல்வராஜ், 50, மகளை பார்க்க குண்டடம் வந்தார். மகள் வேதனைப்படுவதை பார்த்த செல்வராஜ், அவ்வழியாக வந்த மருமகன் மீது, கார் ஏற்றி கொல்ல முயன்றார்.
காயத்துடன் தப்பிய அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், குண்டடம் போலீசார் செல்வராஜை நேற்று கைது செய்தனர்.

