/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாமளாபுரம் பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
/
சாமளாபுரம் பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : ஜூலை 12, 2024 12:41 AM

திருப்பூர் : சாமளாபுரம் ஸ்ரீவரதராஜபெருமாள் கோவில் கும்பாபிேஷகம் இன்று காலை நடைபெறவுள்ளது.
சாமளாபுரம் பகுதியில் 1200 ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீபூமி நீளாதேவி சமேதராக அருள் பாலிக்கும் வரதராஜ பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
கோவில் கடந்த 1994ம் ஆண்டில் புனரமைக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. அதன் பின் தற்போது திருப்பணிகள் மேற்கொண்டு இதன் கும்பாபிேஷகம் இன்று நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் முளைப்பாலிகை, அனுக்ைஞ, வாஸ்து சாந்தி ஆகியன நடத்தி, முதல் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. முன்னதாக, திருப்பள்ளிெழுச்சி, விமான கலசம், மூலவர் மற்றும் அனைத்து சன்னதிகளிலும் திருமஞ்சனம், பூர்ணாகுதி ஆகியன நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.
இன்று அதிகாலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி மற்றும் கடம் புறப்பாடும், காலை 6:00 முதல் 7:00 மணிக்குள் கோவில் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து தச தானம் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீகேசவ பட்டாச்சார்யார் குழுவினர் சர்வ சாதகமும், ஸ்ரீமத் அகோபில மடம் ராஜகோபாலன் அருளாசி நிகழ்வும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்துள்ளனர்.

