/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒலிம்பிக் வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் வாழ்த்து
/
ஒலிம்பிக் வீரர்களுக்கு பள்ளி மாணவர்கள் வாழ்த்து
ADDED : ஜூலை 29, 2024 03:12 AM

உடுமலை;நடப்பாண்டு ஒலிம்பிக்கில், இந்திய வீரர்கள் வெற்றி பெறுவதற்கு, பூளவாடி பள்ளி மாணவர்கள் வரைபடமாக வாழ்த்து தெரிவித்தனர்.
நடப்பு 2024ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய விளையாட்டு வீரர்கள் அதிகளவில் பதக்கம் பெறுவதற்கும், சிறப்பாக விளையாடுவதற்கும், ஊக்குவிக்கும் வகையிலும், வாழ்த்து தெரிவித்தும், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஓவியமாக வாழ்த்து தெரிவித்தனர்.
ஒலிம்பிக் வளையங்கள் போல அமைப்பை மாணவர்கள் உருவாக்கி, தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்செல்வன், பெஞ்சமின் மாணவர்களை வளைய வடிவில் அமைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் முத்துகுமாரசாமி ஒருங்கிணைத்தார்.