தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு கலை கல்லுாரியில் மாணவர் அறிமுக நிகழ்ச்சி

அரசு கலை கல்லுாரியில் மாணவர் அறிமுக நிகழ்ச்சி

அரசு கலை கல்லுாரியில் மாணவர் அறிமுக நிகழ்ச்சி


ADDED : ஜூலை 02, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 10:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி, ஜூலை 3–

அவிநாசியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி கல்லுாரியின் உள்தர உறுதிப்பாட்டு அலகு சார்பில் நடைபெற்றது.

வணிகவியல் துறை தலைவர் முனைவர் சரோஜா கல்லூரியில் செயல்பட்டு வரும் பல்வேறு குழுக்கள், செயல்பாடுகள் மற்றும் மாணவர்கள் அவற்றில் பங்கேற்பதன் அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து, இயற்பியல் துறை தலைவர் பாலமுருகன், ‘நான் முதல்வன் திறன் மேம்பாட்டு திட்டங்கள்,’ என்ற தலைப்பில் அரசின் திறன் மேம்பாட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு திறன்களை வளர்த்துக் கொள்ளும் வழிமுறை, மாணவர்கள் பயன்படுத்த வேண்டிய வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பன்னாட்டு வணிகவியல் துறை தலைவர் பாலமுருகன் பாடத்திட்டத்தை விட திறன் கல்வி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து சிங்கப் பெண் காவலர் திட்ட எஸ்.ஐ., தீபா மற்றும் அகிலா ஆகியோர், ‘சிங்கப்பெண்ணே பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி’ என்ற தலைப்பில் பெண்களுக்கான பாதுகாப்பு, இணைய வழி குற்றங்கள், சட்ட விழிப்புணர்வு, அவசர உதவி எண்கள், தற்காப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன், பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us