/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை புரட்சி ஏற்படுத்திய 'வனத்துக்குள் திருப்பூர்': தொழில்துறையினர் - பசுமை ஆர்வலர்கள் பெருமிதம்
/
பசுமை புரட்சி ஏற்படுத்திய 'வனத்துக்குள் திருப்பூர்': தொழில்துறையினர் - பசுமை ஆர்வலர்கள் பெருமிதம்
பசுமை புரட்சி ஏற்படுத்திய 'வனத்துக்குள் திருப்பூர்': தொழில்துறையினர் - பசுமை ஆர்வலர்கள் பெருமிதம்
பசுமை புரட்சி ஏற்படுத்திய 'வனத்துக்குள் திருப்பூர்': தொழில்துறையினர் - பசுமை ஆர்வலர்கள் பெருமிதம்
ADDED : பிப் 26, 2025 04:34 AM

திருப்பூர் : வெற்றி அறக்கட்டளை, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 10 ஆண்டுகளில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு இமாலய சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மட்டும், நான்கு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களில் உருவான 'மியாவாகி' காடுகள், மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்துள்ளது. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின், 11வது திட்டத்துக்கான நர்சரி துவக்க விழா, வரும், 1ம் தேதி நடக்கிறது. 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற திட்டத்தை பெயரை மெய்ப்பிக்கும் வகையில், குறுங்காடுகள் நிறைந்த மாவட்டமாக, திருப்பூர் மாறியுள்ளதாக, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் :
'வெற்றி' அறக்கட்டளை, திருப்பூர் நலனுக்காக, மாபெரும் மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ஏற்றுமதியாளர் எவ்வளவு உதவி செய்தாலும், களப்பணியாளற்றும் பசுமை ஆர்வலர்களை பாராட்டியே ஆக வேண்டும். இன்றைய சூழலில், உலக நாடுகள் பசுமை வளர்ப்பை எதிர்பார்க்கின்றன. திருப்பூரின், 22 லட்சம் மரம் வர்த்த 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், உலகளாவிய திட்டமாக பேசப்படுகிறது. சர்வதேச கண்காட்சிகளிலும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் பல இடங்களிலும் இத்திட்டத்தை முன்னோடி திட்டமாக கொண்டு செயல்பட துவங்கியுள்ளனர்.
ராஜா சண்முகம், தலைமை ஆலோசகர், 'நிப்ட்-டீ' கல்லுாரி, முதலிபாளையம் :
திருப்பூர் தொழில் வளர்ச்சியால், இயற்கை பாதித்தது; பின்னாளில் அதை உணர்ந்து சரிசெய்ய, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் உதவியாக இருந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, தண்ணீர் மறுசுழற்சி ஆகிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளோம். வனத்தை தெரியாமல் அழித்துவிட்டனர்; இத்திட்டத்தில், புதிய வனங்களை உருவாக்கியுள்ளோம். 22 லட்சம் மரக்கன்று நட்டு வளர்ப்பது மாபெரும் சாதனை. பெயருக்கு ஏற்ப, 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற சூழலை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். உலகமே இன்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பை எதிர்பார்க்கிறது.
சண்முகராஜ், கட்டட பொறியாளர் :
வருங்கால தலைமுறைக்கு, துாய்மையான சுற்றுச்சூழலை உருவாக்கி கொடுப்பது, நமது ஒவ்வொருவரின் கடமை என்பதை, வாழ்வில் லட்சியமாக கொண்டது, 'வனத்துக்குள் திருப்பூர்'. கடந்த, 10 ஆண்டு பசுமை பயணம், சுற்றுச்சூழல் சமூக நற்பணிகளுக்கு, திருப்பூர் மக்களின் பங்களிப்பை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆண்டுக்கு ஆண்டு, மரம் வளர்ப்பும், சமூக கொடையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. விதையாக துாவியது, ஆலம் விருட்மென வளர்ந்து, திருப்பூருக்கு பெருமை தேடி கொடுக்கிறது.

