/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளுக்கு 6 நாள் 'லீவு' 13ம் தேதி வேலை நாள்
/
பள்ளிகளுக்கு 6 நாள் 'லீவு' 13ம் தேதி வேலை நாள்
ADDED : ஜன 11, 2025 09:00 AM
திருப்பூர் : 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பள்ளிகளுக்கு ஆறு நாட்கள் விடுமுறை. வரும், 13ம் தேதி பள்ளிகள் செயல்படும்,' என, மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும், 14 முதல், 19ம் தேதி வரை ஆறு நாட்கள் பள்ளிகள் விடுமுறை. முன்னதாக இன்று (11ம் தேதி) அரசு பள்ளி வேலை நாள் இல்லை; விடுமுறை. நாளை (12ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை. அதே நேரம், வரும், 13ம் தேதி போகி பண்டிகை நாளில் பள்ளி செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையின் துவக்கமாக போகி பண்டிகை இருந்தது. தற்போது, போகி பண்டிகை விடுமுறை தவிர்க்கப்பட்டு, அந்நாளில் பள்ளிகள் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் கூறுகையில்,''கல்வியாண்டு துவக்கத்தில் வெளியிடப்பட்ட நாட்குறிப்பு அட்டவணையில் வரும், 13ம் தேதி பள்ளி வேலை நாள் என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னரே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

