போதை தடுப்பு சோதனையில் 68 பேர் கைது ஒரே நாளில் அதிரடி
போதை தடுப்பு சோதனையில் 68 பேர் கைது ஒரே நாளில் அதிரடி
ADDED : ஜூலை 06, 2026 06:03 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்டதீவிர போதைப்பொருள் தடுப்பு சோதனையில், 68 பேர் கைது செய்யப்பட்டனர்.
எஸ்.பி. சிரிஷ்டி சிங் உத்தரவின்படி, அவிநாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில், டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில், அதிகாலை 5:00 மணி முதல் 410 போலீசார், 82 குழுக்களாக பிரிந்து சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தனியார் நிறுவன தொழிலாளர்கள் தங்கும் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில், கஞ்சா வைத்திருந்த 16 பேர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குட்கா வைத்திருந்த 43 பேர் மற்றும் அனுமதியின்றி மது விற்ற 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டது.
சோதனையுடன் பொதுமக்களிடையே போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும் என எஸ்.பி. சிரிஷ்டி சிங் எச்சரித்துள்ளார்.
