/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விமான சேவை பாதிப்பு ஏற்றுமதியாளர் தவிப்பு
/
விமான சேவை பாதிப்பு ஏற்றுமதியாளர் தவிப்பு
ADDED : டிச 09, 2025 07:50 AM
திருப்பூர்: இண்டிகோ விமான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் திருப்பூர் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலர் குமார் துரைசாமி கூறியதாவது:
திருப்பூரில் உள்ள ஏற்றுமதி தொழில் செய்வோர், பெரும்பாலும் கோவை, சென்னை, டில்லி, ைஹதராபாத், மும்பை நகரங்களில் இருந்து தான், விமானத்தின் வாயிலாக வெளிநாடுகளுக்கு செல்வர்; இதற்கு, 'இண்டிகோ' விமான போக்குவரத்து பெரும் உதவியாக இருந்து வருகிறது. அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பின், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்கள் வர்த்தகத்தை தக்க வைக்கவும், அதிகப்படுத்தும் நோக்கிலும், ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் புதிய வர்த்தக வாய்ப்பை தேட துவங்கியிருக்கின்றனர்.
அந்நாடுகளில் உள்ள வர்த்தகர்களை, அவர்கள் குறிப்பிடும் நாளில், குறித்த நேரத்தில் சந்திக்க வேண்டும்; அப்போது தான் வர்த்தக வாய்ப்புகளை தக்க வைக்க முடியும்.
ஆனால், விமான போக்குவரத்து பாதிப்பால், இந்த சந்திப்பு தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது. இதனால், அந்நாட்டு வர்த்தகர்கள் மத்தியில் நமக்கான நற்மதிப்பும் பாதிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வாயிலாக திருப்பூர் வரும் வர்த்தகர்களும் பல்வேறு வகைகளில் அலைகழிக்கப்படுகின்றனர்.
விமான போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதே நேரம், 'இண்டிகோ' போன்று, வேறு நிறுவனங்கள் விமான சேவைகளை வழங்கினால், இதுபோன்ற பிரச்னைகளை எளிதாக சமாளிக்க முடியும் .

