/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவத்துறை பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மருத்துவத்துறை பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு
மருத்துவத்துறை பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு
மருத்துவத்துறை பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : டிச 02, 2025 06:28 AM
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் காலியாக உள்ள பிஸியோதெரபிஸ்ட், ஆடியோலஜிஸ்ட், ஆடியோமெட்ரிசியன், தரவு மேலாளர், பல் மருத்துவ உதவியாளர், மருத்துவமனை பணியாளர் மற்றும் சித்த மருத்துவ பிரிவுகளின் கீழ், காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள், ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கத்தின் வாயிலாக நிரப்பப்பட உள்ளன.
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது; பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. விண்ணப்பங்களை, http://tiruppur.nic.in./notice category/recruitment/ என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், டிச., மாதம், 15ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில், 'நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 147 பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் - 641 602' என்ற முகவரிக்கு நேரிலோ, விரைவு தபால் வாயிலாகவோ அனுப்ப வேண்டும்.

