/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீசார் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு திறனறிப்போட்டி
/
போலீசார் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு திறனறிப்போட்டி
போலீசார் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு திறனறிப்போட்டி
போலீசார் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு திறனறிப்போட்டி
ADDED : மார் 17, 2024 11:58 PM

உடுமலை;உடுமலையில், பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு திறனறிப்போட்டி நடந்தது.
உடுமலையில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற கருத்தின் அடிப்படையில் போட்டிகள், லயன்ஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.
போட்டிகளை, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா துவக்கி வைத்தார். மூன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, ஓவியப்போட்டிகள் பல்வேறு தலைப்புகளில் நடந்தது.
மாணவர்களுக்கான இணையவழி வினாடிவினா போட்டியும் நடந்தது. இதில் குழந்தை பாதுகாப்பு, போக்சோ தடை சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் குறித்து, வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து மாணவர்களின் குழு கலந்துரையாடல் நடந்தது. அதில் பங்கேற்ற பெண் குழந்தைகள், அவர்கள் சந்தித்த பல்வேறு பிரச்னைகள் குறித்தும், தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்தி, விழிப்புணர்வுடன் இருந்ததையும் சுட்டிக்காட்டினர்.
நிறைவு விழாவில், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மணி வரவேற்றார். உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன், மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பங்கேற்ற மாணவர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் கண்ணபிரான், போட்டிகளை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மகளிர் போலீஸ் எஸ்.ஐ., சித்ரா செய்திருந்தார்.

