மத்திய அரசின் பணிகள்; பா.ஜ. தேசிய நிர்வாகி ஆய்வு
மத்திய அரசின் பணிகள்; பா.ஜ. தேசிய நிர்வாகி ஆய்வு
ADDED : ஜூலை 01, 2026 06:37 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூருக்கு வந்த பா.ஜ. தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் மத்திய அரசு பணிகளை பார்வையிட்டார்.
பா.ஜ. தேசிய செயலாளரும், தமிழ்நாடு பார்வையாளருமான அரவிந்த் மேனன், திருப்பூருக்கு நேற்று வந்தார். அவருக்கு வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, காலேஜ் ரோட்டில் உள்ள கொங்கணகிரி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதன்பின், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மத்திய அரசு நிதியில் நடக்கும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட பின், பல்லடம் வடக்கு ஒன்றியத்தில் மரம் நடும் விழாவில் பங்கேற்றார். பின், மண்டல தலைவர்கள், மாவட்ட மையக்குழு மற்றும் பயிற்சி முகாம் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
