/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தினமலர் 'பட்டம்' இதழ் மகத்துவம் மாணவர் திறன் உச்சம் தொடும்
/
தினமலர் 'பட்டம்' இதழ் மகத்துவம் மாணவர் திறன் உச்சம் தொடும்
தினமலர் 'பட்டம்' இதழ் மகத்துவம் மாணவர் திறன் உச்சம் தொடும்
தினமலர் 'பட்டம்' இதழ் மகத்துவம் மாணவர் திறன் உச்சம் தொடும்
ADDED : டிச 09, 2025 08:00 AM

திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் இணைந்து நடத்தி, 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் அடுத்த புதுப்பாளையம், கொங்கு மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி அறிவியல் கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம் படுத்தும் நோக்கில், 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.
படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க மாணவ, மாணவிகளுக்காக வினாடி வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர்; அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சத்யா ஏஜென்சீஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில், சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் அடுத்த புதுப்பாளையம், கொங்கு மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றில், 135 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவியர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர்.
பல சுற்றுகளாக நடந்த போட்டியில், ஒன்பது வகுப்பு மாணவர் தனசேகர், எட்டாம் வகுப்பு மாணவி கயல்விழி ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்; இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி தாளாளர் சந்திரசேகர், முதல்வர் சுந்தரவடிவு, ஒருங்கிணைப்பாளர்கள் பிரீத்தி, புவனேஸ்வரி, யசோதா ஆகியோர் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில் சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் கிப்ட் ஸ்பான்சர்களாகஇணைந்துள்ளன.

