/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்சி அலுவலகங்களில் மின் இணைப்பு ஆய்வுக்கு தயாராகிறது மின் வாரியம்
/
கட்சி அலுவலகங்களில் மின் இணைப்பு ஆய்வுக்கு தயாராகிறது மின் வாரியம்
கட்சி அலுவலகங்களில் மின் இணைப்பு ஆய்வுக்கு தயாராகிறது மின் வாரியம்
கட்சி அலுவலகங்களில் மின் இணைப்பு ஆய்வுக்கு தயாராகிறது மின் வாரியம்
ADDED : டிச 09, 2025 07:59 AM

திருப்பூர்: திருப்பூர் தி.மு.க. தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அலுவலகங்களில் மின் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்துவது தெரியவந்தது.
இதன் எதிரொலியாக மாநகராட்சி பகுதி முழுவதும் செயல்படும் அரசியல் கட்சி அலுவலகங்கள் இயங்கும் கட்டடங்களில் மின் இணைப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய களமிறங்கினர்.
பகுதிவாரியாக உள்ள கட்டடங்கள், அதன் உரிமையாளர் உள்ளிட்ட விவரம், பயன்படுத்தும் அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள், மின் இணைப்புகளின் விவரங்கள் ஆகியவற்றை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் முறைகேடுகள் கண்டறிந்தால் உடனடியாக தகவல் அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில், ''அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் இயங்கும் கட்டடங்களில் உள்ள மின் இணைப்புகள் குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்படும் நிலையில் மேலும், சில இணைப்புகள் இதில் சிக்கும் வாய்ப்புள்ளது. இது மாநகராட்சி பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும்,'' என்றார்.