தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேட்டி,சேலைக்கு நிதி ஒதுக்கீடு விசைத்தறியாளர் வரவேற்பு

 வேட்டி,சேலைக்கு நிதி ஒதுக்கீடு விசைத்தறியாளர் வரவேற்பு

 வேட்டி,சேலைக்கு நிதி ஒதுக்கீடு விசைத்தறியாளர் வரவேற்பு


ADDED : ஜூலை 05, 2026 07:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 07:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி-சேலை உற்பத்திக்காக தமிழக அரசு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதை, திருப்பூர்-கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.

திருப்பூர்-கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''இந்த நிதி ஒதுக்கீட்டால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும், நெசவாளர்களுக்கு வருவாயும் அதிகரிக்கும். ஈரோடு, திருச்செங்கோடு பகுதிகள் நேரடியாகப் பயன்பெறும் நிலையில், அங்குள்ள உற்பத்தி அதிகரிப்பால் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறிகளுக்கும் மறைமுகமாக ஆர்டர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், நலிவடைந்துள்ள விசைத்தறி தொழில் புத்துயிர் பெறும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us