ADDED : ஜூலை 06, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம், அவிநாசியில் மாவட்டத் தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஜோதிநாத், சென்னியப்பன், அந்தோணிசாமி ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
