/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீதோஷ்ண மாற்றத்தால் உடல் நல பாதிப்புகள்; சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை
/
சீதோஷ்ண மாற்றத்தால் உடல் நல பாதிப்புகள்; சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை
சீதோஷ்ண மாற்றத்தால் உடல் நல பாதிப்புகள்; சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை
சீதோஷ்ண மாற்றத்தால் உடல் நல பாதிப்புகள்; சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை
ADDED : டிச 02, 2025 07:08 AM
திருப்பூர்: தொடர் மழையால் மாநிலம் முழுதும் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, குளிர்ந்த காற்று வீசுகிறது. வெயிலின் தாக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர், தொடர் மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்வோர், இணை நோய் உள்ளவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மழை, குளிர் நிலவும் போது இயல்பாகவே காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு அதிகரிக்கும். வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுவாக குளிர் அதிகமாகி விடுவதால், துவக்கத்தில் இருக்கும் மழையின் வேகம் படிப்படியாக குறையும்.
ஆனால், தற்போது, 'டிட்வா' புயல் காரணமாக, கடலோர மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான பகுதியில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மழை நீர் தேங்கும் போது, மழை நின்ற பின்பும் தான் காய்ச்சல் பாதித்தவர் அதிகமாக மருத்துவமனைக்கு வருவர்.
வெயிலை விட குளிர், மழையால் உடல் நலக்குறைவு அதிகம் ஏற்படும். டெங்கு தாக்கம் கட்டுக்குள் உள்ள நிலையில், திடீர் புயல் மழை, சீதோஷ்ண நிலையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
டெங்கு பாதிப்பு குறைந்த நிலையில், மழையால் காய்ச்சல் பாதிப்பு உயர உள்ளது; நோய் தடுப்பு பணியில் உள்ள மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறையினரை கவலை அடைய செய்துள்ளது.

