/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாய்த்தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா
/
தாய்த்தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா
ADDED : ஜன 30, 2025 11:48 PM

திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோடு, பாண்டியன் நகர் அருகே தாய்த்தமிழ் இலக்கிய பேரவை துவக்க விழா நடைபெற்றது.
முன்னதாக, காணொலியில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், கவிஞர் மீன்கொடி பாண்டியராஜ் வரவேற்றார். பேச்சாளர் பாசிதா பானு, ஹரிகரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். குழுவின் நோக்கம் குறித்து கலந்துரையாடல் நடந்தது. கவிஞர் அருணாசல சிவாவின் ஜென் கதைகள் புத்தகம், ஆய்வு செய்யப்பட்டது. பேச்சாளர்கள் மகாலட்சுமி, பூர்ணிமா ஆகியோர் பேசினர். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் முதல் பரிசு யாழினி; இரண்டாம் பரிசு தக்ஷனா, மூன்றாம் பரிசு நந்தினி ஆகியோர் பெற்றனர். கல்லுாரி அளவில், முதல் பரிசு ஹரிணி, இரண்டாம் பரிசு கீர்த்தனா பெற்றனர். பொது பிரிவில் முதல் பரிசு, நிவேதா பெற்றார்.

